Saturday, April 22, 2006

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்

படம் - உயர்ந்தவர்கள் பாடல்: ??? கண்ணதாசன் இசை - தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாடஅவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையைச்செய்தன் தான் விளையாடஉன் வாய் மொழி முல்லை இனி தாய் மொழி இல்லை (இறைவண்)

வெய்யில் என்ன மின்னல் என்ன வெண்மை என்ன மஞசள் என்னகாணாத கண்கள் ரெண்டில் எல்லாமே ஒன்றுதான்தென்றல் காற்றும் ஊமைக்காற்று தேவன் பாட்டும் ஊமைப்பாட்டுஅவன் தானே நம்மைச்செய்தான் துன்பங்கள் இல்லயேஉன் வாய் மொழி முல்லை இனி தாய் மொழி இல்லை ( இறைவன்)


உஙக்ளுக்காக நானே சொல்வேன் உஙக்ளுக்காக நானே கேட்பேன்தெய்வங்கள் கல்லாய்ப்போனால் பூசாரி இல்லையாதந்தை பேச்சு தாய்க்குப் புரியும் தாத்தா நெஞ்சில் உலகம் புரியும்உள்ளத்தில் நல்லோர் எல்லாம் உயர்ட்ந்தவர் இல்லையாஉன் வாய் மொழி முல்லை இனி தாய் மொழி இல்லை ( இறைவன்)


மலரும் போதெ வாசம் தெரியுது வளரும் போதே பாசம் புரியுதுதாய் தந்தை செய்த பூஜை வீணாகவில்லையேகந்தன் அன்ற் மந்திரம் கண்ணன் அன்று கீதையில் சொன்னான்மகன் சொன்ன பாடம் கேட்டேன் மறைந்தது தொல்லையேஉன் வாய் மொழி முல்லை இனி தாய் மொழி இல்லை ( இறைவன்)

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாடஅவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையைச்செய்தன் தான் விளையாடஉன் வாய் மொழி முல்லை இனி தாய் மொழி இல்லை


குறிப்பு: இந்த திரைப்படத்தில் நாயகன், நாயகி இருவருக்கும் காது கேட்காது, வாய் பேச முடியாது. தாதாவ்ற்கு கண் தெரியாது. இந்த பாடல் இவர்களின் குழந்தையும் தாத்தாவும்பாடுவதாக அமைட்ந்துள்ளது. (கமல், சுஜாதா, தேங்காய் சீனிவாசன் நடித்தது).

2 Comments:

Blogger பாரதிய நவீன இளவரசன் said...

ஹிந்தியில் சஞ்சீவ் குமார்-ஜெய பாதுரி நடித்து ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற படம் `கோஷிஷ்'. இருவருக்குமே அந்த ஆண்டின் (1973) சிறந்த நடிகர், நடிகை விருது கிடைத்தது. Koshish படத்தின் தழுவல்தான் இந்தப் படமென நினைக்கிறேன்.

யதார்த்தமான நடிப்பும், ஜீவனுள்ள திரக்கதையும் (குல்சர்) படத்தை மிக உயரத்திற்குக் கொண்டுபோனது.

தமிழில், இந்தப்படம் அவ்வளவாகப் போகாததற்கு என்ன காரணமென்று எனக்குத் தெரியவில்லை..

ஆனால், இந்தப் பாடலுக்கு மட்டும் மனதில் நீங்கா இடம் கிடைத்தது என்னவோ உண்மை.

9:19 AM

 
Blogger Chandravathanaa said...

நல்ல பாடல்.
வெங்கடேசின் தகவலுக்கும் நன்றி.

4:00 PM

 

Post a Comment

<< Home